Thursday, 5 May 2011

புறா பந்தயம்



விழுப்புரத்தில் நடைபெற்ற புறா பறக்கும் போட்டியில் வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.÷விழுப்புரம் புறா ரேஸ் கிளப் சார்பில் இந்தப் போட்டி நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலாண்டில் விராலிமலையில் விடப்பட்ட புறாக்கள் சரியாகவும், முதலிலும் விழுப்புரம் வந்த புறாக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதுபோல் இரண்டாம் ஆண்டு விருதுநகர், மூன்றாம் ஆண்டு கன்னியாகுமரி ஆகிய இடங்களிலிருந்து விடப்பட்டது.÷இந்த ஆண்டு விழுப்புரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 30 புறாக்கள் கும்மிடிப்பூண்டியில் விடப்பட்டன. அங்கிருந்து சுமார் 200 கி.மி. தூரம் பறந்து இரண்டரை  மணி நேரத்தில் விழுப்புரத்திற்கு வந்து சிவாவின் புறா முதலிடத்தையும், ரவியின் புறா இரண்டாமிடத்தையும், ராஜேஷின் புறா மூன்றாமிடத்தையும் பிடித்தன.÷விழுப்புரம் மருதூர்மேடு பகுதியில் வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு கால்நடை மருத்துவர் எஸ். குருவய்யா கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கினார். 4, 5, 6-வது இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை சிரில் ராஜேஷ் செய்திருந்தார்.

0 comments:

Post a Comment